Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல அஜித் பொழுதுபோக்காக என்ன செய்வார் தெரியுமா? ரசிகர்கள் இதுவரை பார்க்காத ரகசிய வீடியோ
தமிழ் சினிமாவில் நடிப்பு தவிர்த்து தனித் திறமைகள் அதிகமாகக் கொண்ட நடிகர் தல அஜித். பைக் ரேஸ், கார் ரேஸ் என மோகம் கொண்டவர். அதில் புதிய மாடல் பைக் மற்றும் கார்கள் எது வந்தாலும் அதனை வாங்கிப் பிரித்துப் பார்ப்பது தான் அவரின் முதல் வேலை.
தற்போது துப்பாக்கி சுடுதல் மற்றும் அண்ணா யூனிவர்சிட்டி மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் போன்றவற்றின் பயன்களைப் பற்றி கற்றுத் தருவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அஜித்துடன் வேதாளம் படத்தில் நடித்த அஸ்வின் என்ற நடிகர் தல அஜித் ரசிகர்கள் இதுவரை பார்க்காத தல அஜீத்தின் பொழுதுபோக்கு அம்சங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த தல ரசிகர்கள் படு வைரலாக பரப்பி வருகின்றனர். மேலும் அவ்வளவு எளிதில் தல அஜித் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரையும் வெளியில் பார்க்க முடியாது என்பது உண்மை.
தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளும் நிலவி வருகின்றன.
மேலும் வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை தற்போது டெல்லிக்கு மாற்றி டெல்லியில் நடப்பது போன்று கதை அமைக்கப்பட்டு வருகிறது.
