fbpx
Connect with us

Cinemapettai

அஜித்தின் ராஜா பட நடிகை இந்த பிரபல நடிகரின் மனைவியா? ஜிம் ஒர்க்கவுட்டில் கும்முனு வெளிவந்த புகைப்படம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் ராஜா பட நடிகை இந்த பிரபல நடிகரின் மனைவியா? ஜிம் ஒர்க்கவுட்டில் கும்முனு வெளிவந்த புகைப்படம்!

தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

அஜித் நடிப்பில் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், தல61 படத்தைப் பற்றிய செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் எழில் இயக்கத்தில் உருவான திரைப்படம் ராஜா. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் பிரியங்கா திரிவேதி ஆகியோர் நடித்து இருப்பார்கள்.

இதில் பிரியங்கா திரிவேதி அந்த படத்திற்கு பிறகு தமிழில் காதல் சடுகுடு போன்ற படங்களில் நடித்தார். பின்னர் கன்னட சூப்பர் ஸ்டாரான உபேந்திராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

தற்போது 42 வயதான பிரியங்கா திரிவேதி தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடல் நிலையை சீராக வைத்துள்ளார். மீண்டும் சினிமாவில் களம் இறங்க உள்ளாராம்.

priyanka-upendra-cinemapettai

priyanka-upendra-cinemapettai

பிக்பாஸ் மகத் மற்றும் யாஷிகா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது.

priyanka-raja-movie-fame

priyanka-raja-movie-fame

Continue Reading
To Top