அறிமுகப்படுத்தியவருக்கே 1008 கண்டிஷன் போட்ட அஜித்.. ஒரே வார்த்தையில் ஆப் செய்த இயக்குனர்

தல அஜித் ஒரு முறை தனக்கு அமராவதி என்ற அறிமுக படத்தை கொடுத்த செல்வாவை அழைத்து இருவரும் சேர்ந்து படம் செய்யலாம் என கூறினாராம். அதைக் கேட்டு அஜித்துக்கு செல்வா ஒரு கதையை ரெடி செய்து படத்துக்கு ஓகே வாங்கி விட்டாராம்.

இந்நிலையில் தல அஜித், செல்வாவின் பழைய டெக்னீஷியன்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் யாரும் தன்னுடைய படத்தில் பணியாற்ற கூடாது எனவும், எல்லாமே நான் சொல்லும் டெக்னீசியன்கள் தான் பணியாற்ற வேண்டும் எனவும் 1008 கண்டிஷன் போட்டாராம்.

இதை கொஞ்ச நேரம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த செல்வா, தல அஜித்தை அருகில் அழைத்து, நீங்கள் முதல் படம் நடிக்கும் போது இப்படித்தான் இயக்குனர்கள் மற்றும் டெக்னீசியன்களுக்கு கண்டிஷன் போட்டீர்களா? என்று சுருக்குனு கேட்டாராம்.

அதைகேட்ட அஜித்துக்கு மூஞ்சியே இல்லை. தல அஜித்துடன் பணியாற்ற பல இயக்குனர்கள் ரெடியாக இருந்த நேரத்தில் அஜித்தே வழியக் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்ததையும் வேண்டாம் என்று சொல்லிட்டுச் சென்றாராம் செல்வா.

இந்த தகவலை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தன்னுடைய யூடியூப் சேனல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை கேட்டதிலிருந்து தல ரசிகர்கள் இது உண்மையா, பொய்யா என இணையதளத்தை அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்