fbpx
Connect with us

Cinemapettai

அஜித் படத்தை தயாரித்த நிறுவனம் 7 வருடம் பிறகு விஜய் படத்தை தயாரிக்கவுள்ளது

News | செய்திகள்

அஜித் படத்தை தயாரித்த நிறுவனம் 7 வருடம் பிறகு விஜய் படத்தை தயாரிக்கவுள்ளது

ajith-vijayவிஜய் நடித்து முடித்துள்ள 59வது படமான ‘தெறி’ திரைப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் படக்குழுவினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் 60வது படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் ஆரம்பமாகிவிட்டது. இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விஜய் 60′ படத்திற்கு பாடல்களை கம்போஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார். வரும் மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இந்நிலையில் விஜய் நடிக்கவுள்ள 61வது படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஹரி இயக்கவுள்ளதாகவும் இந்த படம் வரும் 2017ல் தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் ‘அசல்’ என்ற படத்தை தயாரித்த சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் ஏழு வருடங்கள் கழித்து விஜய்யை வைத்து ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top