fbpx
Connect with us

அஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’ 

ajith-tamizhisai-soundarrajan

News | செய்திகள்

அஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’ 

திருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர் நூறுபேரை அழைத்து இப்படி செய்தியை கிளப்பிவிட்டு விளம்பரப் படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

கூட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தராஜன் மோடியின் திட்டங்களுக்கு அஜித் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள், அஜித் மிக நல்லவர் நிறைய பேருக்கு உதவி செய்துள்ளார் என்று அஜித்தை புகழ்ந்தும், மோடியின் திட்டத்தை அஜித் ரசிகர்கள் மக்களிடத்தில் சேர்ப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

அஜித்

இந்நிலையில் தன் மீது அரசியில் சாயம் பூசப்படுவதை உணர்ந்து அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என்மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையே தான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எந்தவொரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் சற்றும் விரும்பவில்லை”

என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்களின் பெயரையோ சம்மந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்கிற ஐயப்பாட்டை பொதுமக்களிடையே விதைக்கும்.

ajith press release

என் ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும். சட்டம் ஒழுங்கை மதித்து நடந்துக் கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவதும், வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும், ஆகியவை தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு’ வாழு வாழ விடு” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top