மும்மூர்த்திகளில் ஒருவரும், அண்ட சராசரங்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் விளங்கக்கூடிய சிவபெருமானை இரவு முழுவதும் கண்விழித்து மக்கள் மனதார வழிபடும் மஹா சிவராத்திரி விழா நேற்று உலகம் முழுக்கவும் கொண்டாடப்பட்டது.

ஆன்மிகத்தின் அடிநாதமாக விளங்கும் சிவ பெருமானுக்கு மிகப்பெரிய சிவலிங்கத்தை கொண்டிருக்கும் கோயிலானது கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. தங்கச் சுரங்கத்திற்கு பெயர்போன கோலார் மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா என்ற இடத்தில் அமைந்திருக்கும் கோடி லிங்கேஸ்வரர் கோயிலில், 108அடி உயரமான உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் இருக்கிறது.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, கோயில் லிங்கேஸ்வரர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் அங்கு வழிபட்டு சென்றனர். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பர்தா அணிந்துகொண்டு அங்கு குவிந்துள்ள லிங்கங்களை வழிபட்டதுதான். இவரை பார்த்து ஏராளமான பக்தர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.

மதங்களுக்கு அப்பாற்பட்டு அந்த இஸ்லாமிய பெண் வழிபட்டது அனைவர் மத்தியிலும் மகிழ்ச்சியையும், மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கும் அந்த பெண்ணின் மீது மரியாதையும் ஏற்பட்டது.

இந்த கோயிலுக்குத்தான் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் ‘தல’ என புகழப்படும் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் சார்பாக ஒரு லிங்கம் வழங்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here