Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் இருக்கும்போது பிரசாந்துக்கு மாலை போட்ட பஞ்சாயத்து.. அதோட உண்மையான காரணம் இது தான்!
கடந்த சில வருடங்களாகவே தல அஜித் மற்றும் பிரசாந்த் ஆகிய இரு ரசிகர்களுக்கும் இடையே ஒரு பிரச்சனை பொதுவாக இருந்து வந்தது. ஒரு புகைப்படத்தில் தல அஜித் தலைகுனிந்து நிற்பது போலவும், அருகில் நடிகர் பிரசாந்துக்கு மாலை போட்டிருப்பது போலவும் வெளியானது.
அந்த புகைப்படத்தால் சமூக வலைத்தளத்தில் பல பஞ்சாயத்துகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. பிரசாந்த் கூட ஒரு பேட்டியில் அதைப்பற்றி தெளிவாக கூறியிருந்தார். இருந்தாலும் அது பற்றி இன்னமும் சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது.
தல அஜித் தன்னுடைய இளமைக் காலகட்டங்களில் சமகால நடிகர்களின் படங்களின் பூஜைக்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது தான் அந்த மாலை போட்ட பிரச்சனை கிளம்பியுள்ளது.
பிரசாந்த் நடிப்பில் ராஜ்கபூர் இயக்கத்தில் உருவான என்ன விலை அழகே என்ற படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர்களான அர்ஜுன், அஜித் போன்ற பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
படத்தின் பூஜையில் பெரும்பாலும் அந்த படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு மட்டும் தான் மாலை போடுவார்கள் என்பது கோலிவுட் வட்டாரங்களில் மட்டுமில்லாமல் பொதுவாகவே அனைவருக்கும் தெரிந்த செய்தி தான்.
என்ன விலை அழகே படத்தின் ஹீரோ பிரசாந்த். அந்த படத்தின் பூஜை நடந்த போது அவருக்கு மாலை போடப்பட்டுள்ளது. அதே பூஜையில் கலந்துகொண்ட தல அஜித்துக்கு மாலை போடவில்லை.
அதற்கு காரணம் அவர் விருந்தினர் தானே தவிர அந்த படத்தில் அவர் பணியாற்ற வில்லை. இது தவறாக புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் பரப்பி விட்டார்களாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனையின் பதில் தற்போது தெரியவந்துள்ளது.
