தல அஜித் பிறந்தநாளை முன்னிடு அவரது போஸ்டர் தற்போது டிரண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அதிகமான இளைஞர்களை தன்னுடைய ரசிகர்களாக கொண்டவர் தல அஜித். இவர் வரும் மே 1ம் தேதி தன்னுடைய 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். தல அஜித்தின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ரசிகர்கள், அன்னதானம், கண் தானம், இரத்த தானம் உள்பட பலவற்றை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு கோவை மாவட்ட அஜித் ரசிகர்கள் நாளை முதல் வரும் மே 3ம் தேதி வரை தல தின விழா கொண்டாட இருக்கின்றனர்.

கோவை ரசிகர்கள் கோவை மாவட்ட அஜித் தலைமைச் செயலகம் நடத்தும் மே தின நாயகன் பிறந்தநாள் சிறப்பு கொண்டாட்டம் என்று டுவிட்டரில் தல அஜித் அடங்கிய பல போட்டோக்களை போஸ்டர்களாக்கி தன தின விழா கொண்டாடுகின்றனர். தற்போது இந்த போஸ்டர் தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிரெண்டாகி வருகிறது. மேலும், தல நடித்து வரும் விவேகம் படத்தின் பாடல் அடங்கிய டீசர் ரசிகர்களின் பிறந்தநாள் பரிசாக வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.