திரைத்துறையின் மூலம் அறிமுகமான பலர், அரசியலிலும் வெற்றி பெற்றுள்ளனர்… இதற்கு உதாரணமாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணா நிதி உள்ளிட்ட பலர் இருக்கின்றனர்.

ajith

மேலும் தற்போதைய அரசியல் களத்தில் கூட நடிகர் கருணாஸ், சரத்குமார், குஷ்பு, நக்மா என பலர் உள்ளனர்.

தற்போது அரசியல் களத்தில் காலடி வைக்கத் தயாராகி வருபவர் நடிகர் கமலஹாசன். அதேபோல் விரைவில் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ajith thala 57
ajith

கமலஹாசன் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாகக் கூறிவிட்டார் ஆனால் ரஜினிகாந்த் இதுவரை அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசித்து வருவதாக மட்டுமே கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என பல சினிமா பிரபலங்கள் தங்களுடைய கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

ajith

இயக்குனர் சுசீந்தரன் கூட நடிகர் அஜித் மற்றும் கமலஹாசன் இருவரும் அரசியலுக்கு வந்தால் நான்றாக இருக்கும் என ஒரு கருத்தை கூறியுள்ளார்.

அதே போல் நடிகர் ஆரி, அஜித் அரசியலுக்கு வர விருப்பப்படுகிறார் எனக் கூறியுள்ள ஒரு கருத்து திரையுலகினர் மட்டும் இன்றி, ரசிகர்கள் மத்தியிலும் சிறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் அரசியலுக்கு வர விருப்பப்பட்டால், அவரே முன்வந்து தன்னுடைய ரசிகர்களிடம் கூறுவார் என்பது மட்டுமே மறுக்கமுடியாத உண்மை… ஆனால் அவர் அரசியலுக்கு வர விரும்புகிறார் என ஆரி போன்ற நடிகர்கள் கூறுவது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

ajith

அஜித் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்பது தவறில்லை… ஆனால் இது வரை அரசியல் பற்றி எந்த தகவலையும் வெளியிடாத அவர் அரசியலுக்கு வர விரும்புகிறார்… அரசியலுக்கு வருகிறார் .. என்று பரவும் கருத்துக்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.