அஜித்தின் பிறந்தநாள் மே மாதம் 1ம் தேதி. உழைப்பாளர் தினமான அந்நாளில் அஜித் சென்னையில் இல்லை. அவர் இருப்பது பல்கெரியாவில் விவேகம் படத்தின் ஷூட்டிங்கில்.

தன்னுடைய பிறந்தநாளை அங்கேயே கொண்டாடும் அஜித், மே மாதம் இரண்டாவது வாரத்தில்தான் சென்னை வர உள்ளார்.

விவேகம் படத்தின் தயாரிப்பாளர் புண்ணியத்தால் தான் இதுவரை நாலைந்து அஜித்தின் விவேகம் ஸ்டில்கள் வெளிவந்தது. அதே புண்ணியவான் தான் அஜித் பிறந்தநாளுக்கு, அவரின் ரசிகர்களுக்காக விவேகம் படத்தின் டீசரை வெளியிடப்போகிறார்.

இங்கே எடிட்டிங் பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. அதை எடுத்துக்கொண்டு பல்கெரியா சென்று ஓகே வாங்கியும் விட்டார் எடிட்டர் ரூபன்.

Vivegam-Ajithஇப்பவே உற்சாகத்தில் உள்ளார்கள் அஜித் ரசிகர்கள்.

அஜித்தின் விவேகம் அப்டேட் – பல்கேரியன் ஜெண்டர்மேறி கவுண்டர் டெரரிஸ்ட் ஸ்குவாட்டில் அஜித் வேலை செய்கிறார். பல்கெரியன் நிறுவனத்தில் அஜித்தை சென்னையில் இருந்து அழைத்து உளவு பார்க்க சொல்லுகிறார்கள்.