விசுவாசம்

படத்தின் அறிவிப்பு வந்த நாளிலேயே படத்தின் தலைப்பை வெளியிட்டு ஆச்சிர்யப்படுத்தினர் சத்யா ஜோதி பிலிம்ஸ். தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி என்பது மட்டுமே முதலில் உறுதியானது. பின்னர் சில நாட்கள் கழித்து ஹீரோயினாக நயன்தாரா, இசை அமைப்பாளராக இமான் , நகைச்சுவைக்கு யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் என்று பல அப்டேட் வந்த வண்ணம் இருந்தது.

எப்பொழுது ஷூட்டிங் துவங்கும் , படம் தீபாளிக்கு ரிலீஸ் ஆகுமா என்று அஜித் ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். மேலும் படத்தை பற்றிய எதாவது அப்டேட் சொல்லுங்க என்று இயக்குனரிடம் பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தின் ஸ்டில் போடோகிராஃபர் சிற்றரசு உடன் அஜித் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோ சமூக வலைத்தளங்களில் படு வைராலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Ajith with Photographer

அப்படியென்றால் போட்டோஷூட் வேலைகள் முடிக்கப்பட்டிருக்கும். தன் செண்டிமெண்ட் தினமான வரும் வியாழன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு விட்டு, வெள்ளியன்று ஷூட்டிங் துவங்குவார் சிவா என அஜித் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.

காத்திருப்போம்