ரஜினியை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு வந்த தல அஜித்

லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் குழு நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழகத்தின் ஃபேவரைட் நடிகர் அஜித் என்பது தெரியவந்துள்ளது.

லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு எனும் அமைப்பு அரசியல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கருத்து கணிப்பு நடத்தியது.

கருத்துக்கணிப்பு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. தமிழக மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள், அரசியல் கட்சிகளின் செல்வாக்கு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததை போலவே, நடிகர்கள் குறித்தும், இந்த அமைப்பு ஆய்வு செய்துள்ளது.

நடிகர்கள் தொடர்பான கருத்துக்கணிப்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் ரஜினிகாந்த்துக்கு சிறுவர் முதல் பெரியவர் வரையில் ஆதரவு உள்ளது அறிந்ததே. ஆனால், அந்த இடத்தை தற்போது அல்டிமேட் ஸ்டார், அஜித் தட்டிச்சென்றுள்ளார்.

Comments

comments

More Cinema News: