Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜி படத்தின் படப்பிடிப்பை அதிரடியாக ரத்து செய்த அஜித்.. காரணம் இந்த கொடூர சம்பவம் தானாம்!
தல அஜித் என்னதான் சினிமாவில் பெரிய நடிகராக இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் எளிமையான மனிதராகவே தன்னை முன்னிறுத்தியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் எளிமையான மனிதர்களுக்கும் உதவி செய்யும் வகையிலும் அவரை அடித்துக் கொள்ள ஆளில்லை.
தல அஜித் பெரும்பாலும் தயாரிப்பாளர்களை சிரமப்படுத்த மாட்டார். ஆனால் 2004 ஆம் ஆண்டு ஜி படத்தின் படப்பிடிப்பின் போது மட்டும் உடனடியாக கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு மாற்ற சொல்லி விட்டாராம்.
அதற்கு காரணம் அந்த வருடம்தான் கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகள் இறந்த சம்பவம் நடைபெற்றது. அப்போது அதற்குப் பக்கத்தில்தான் தல அஜித்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததாம்.
அந்த செய்தியை கேட்ட பிறகு தல அஜித்துக்கு என்ன செய்வதென்றே புரிய வில்லையாம். உடனடியாக தனது படக்குழுவினருடன் அந்த குழந்தைகள் இறந்த இடத்திற்கு சென்று பார்த்தாராம்.
அந்த குழந்தைகளின் நினைப்பாகவே இருந்த தல அஜித் உடனடியாக படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றுமாறு தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டாராம். மேலும் ஆகும் செலவை நானே தருகிறேன் எனவும் தெரிவித்து விட்டாராம்.
இந்த தகவலை அந்த படத்தில் அவருடன் நடித்த அம்பானி சங்கர் என்ற காமெடி நடிகர் விகடன் பக்கத்திற்கு தெரிவித்துள்ளார். அந்த பாதிப்பிலிருந்து அஜித் மீண்டு வர நீண்ட நாட்கள் ஆகியதாம்.
