Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் மிரட்டும் ஒன் மேன் ஷோ.. துணிவு எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்
அஜித்தின் வேற லெவல் வெறித்தனமான நடிப்பு அவருடைய ரசிகர்களுக்கு முழு ட்ரீட் ஆக அமைந்திருக்கிறது.
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று ஆரவாரத்துடன் வெளியாகி இருக்கிறது. ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. நள்ளிரவில் துவங்கப்பட்ட முதல் காட்சியை பார்த்த அஜித் ரசிகர்கள் படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

thunivu-twitter
தற்போது முதல் காட்சி முடிவடைந்த நிலையில் படம் குறித்து வெளிவரும் விமர்சனங்கள் ஒவ்வொன்றும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது. அந்த வகையில் தற்போது ரசிகர்கள் இந்தப் படம் குறித்த தங்கள் கருத்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

thunivu-twitter
Also read: 3 கதைகளை வைத்துக்கொண்டு சுத்தும் ஹெச்.வினோத்.. தனுஷ் உடனே ஓகே சொல்லிய கதை
அதில் வினோத் மற்றும் அஜித் இருவரும் ஒட்டுமொத்தமாக அனைவரையும் மிரட்டி விட்டதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதிலும் அஜித்தின் பெர்பார்மன்ஸ் ஒன் மேன் ஷோவாக படத்தை ஆக்கிரமித்து இருக்கிறது என்றும் மைக்கேல் ஜாக்சன் டான்ஸ், அடிதடி சேசிங் என மொத்த படத்தையும் அவர் குத்தகைக்கு எடுத்து பட்டாசாக வெடித்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர்.

thunivu-twitter
மேலும் பரபரப்பான திரை கதையும் சமூகத்திற்கு சொல்லும் கருத்துக்களும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. முதல் பாதி எந்த அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கிறதோ அதே அளவுக்கு இரண்டாம் பாதியும் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறது.

thunivu-twitter
Also read: ஆன்லைன் புக்கிங்கில் முதலிடம் யாருக்கு தெரியுமா.? உச்சகட்ட மோதலில் வாரிசு Vs துணிவு
அந்த வகையில் அஜித்தின் வேற லெவல் வெறித்தனமான நடிப்பு அவருடைய ரசிகர்களுக்கு முழு ட்ரீட் ஆக அமைந்திருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் கதை என்ன என்பது தெரிந்திருந்தாலும் படத்தை பார்க்கும் போது சுவாரசியமும், ஆச்சரியமும் அதிகரித்து இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

thunivu-twitter
ஆக மொத்தம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த துணிவு அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறது. தற்போது வெளிவரும் விமர்சனங்களும் பாசிட்டிவாக இருப்பதால் அடுத்தடுத்த நாட்களில் துணிவு கலெக்ஷனில் மாஸ் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

thunivu-twitter

thunivu-twitter

thunivu-twitter
Also read: இவரு என்ன வகையறான்னு தெரியல.. எதையுமே கண்டுக்காத அஜித்தையே யோசிக்க வைத்த வினோத்
