ajithதல அஜித் நடிப்பில் தீனா படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் A.R.முருகதாஸ். அதற்கு முன்பு இயக்குனர் S.J.சூர்யாவிடம் உதவியாளராக இருந்தார். தீனா படத்திற்குபிறகு அஜித் நடிப்பில் கஜினி படத்தை எடுக்க திட்டமிட்டார் முருகதாஸ். ஒருசில காரணங்களால் அஜித்திற்கு பதில் சூர்யா நடித்தார். அதன்பின்பு முருகதாஸ் செல்லும் இடம் எல்லாம் அடுத்து தல படம் எப்போது இயக்குவீர்கள் என்று கேட்க ஆரம்பித்தனர்.

முருகதாஸும் அஜித்துடன் சேர்ந்து படம் பண்ண நினைத்தாலும் அஜித் பிஸியாக இருப்பார் இல்லையென்றால் முருகதாஸ் பிஸியாக இருப்பார். இப்படியே வருடங்கள் கடந்தாலும் இருவரும் விரைவில் இணைவது உறுதி என்று இருவருக்கும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. தல அஜித்திற்காக முருகதாஸ் எழுதி வைத்திருக்கும் கதை முற்றிலும் முடிவடைந்து ரெடியாக உள்ளதாம்.

இந்நிலையில் அஜித் அடுத்து வேதாளம் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதற்கடுத்து இயக்குனர் A.R.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளன. அதற்குள் A.R.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படமும் முடிவடைந்துவிடும். அதன்பின்னரே இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கும் சோழமன்னர் கதையில் அஜித் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளன.