அஜித் குமார் – ‘சிறுத்தை’ சிவா மூன்றாவது முறையாக கூட்டணி அமைந்துள்ள படம் ‘விவேகம்’. இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அப்போது முதலே டீஸரைக் காண ரசிகர்கள் பெரிதும் ஆர்வத்தில் இருப்பதாக தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், டீஸர் வெளியீட்டுக்கு முன்பாக கவுண்டவுன் வைத்து ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டியது படத்தயாரிப்பு நிறுவனம். இதை ரசிகர்களும் டிரெண்டாக்கினர். டீஸர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினர்.

இதையடுத்து சரியாக 12 மணிக்கு விவேகம் டீஸர் வெளியிடப்பட்டது. டீஸருக்கு மிகப் பெரிய மாஸ்ஸான வரவேற்பைப் கொடுக்க எண்ணிய ரசிகர்கள், நள்ளிரவில் வெளியானதுடன் பார்த்து ரசித்ததுடன் அதிகமாக ஷேர் செய்தும் வந்தனர்.

அதிகம் படித்தவை:  டிஆர்பிக்காக இது போன்ற சீரியல்களை ஒளிபரப்பும் பிரபல தொலைகாட்சி நிறுவனங்கள், ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!

விவேகம் டீஸர் வெளியான முதல் அரைமணிநேரத்திலேயே 1 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து ஷேர் செய்யப்பட்டு வந்த டீஸர் 12 மணி நேரத்தில் 25 லட்சம் பார்வையாளர்களை நெருங்கி கொண்டு இருக்கிறது.

இதில், சுமார் 2.35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இதற்கு முன்னதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி டீஸரை 2.32 லட்சம் பேர் லைக் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதை விவேகம் முறியறித்து இருக்கிறது.

அதிகம் படித்தவை:  என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முதலில் நடிக்க இருந்த வில்லன் நடிகர் இவர் தான்.!

ஹாலிவுட் ஸ்டைலில் டீஸர் இருப்பதாக கூறி வரும் ரசிகர்கள், அஜித்தின் ஸ்டைல் லுக், வசனம் ஆகியவை மிகவும் சிறப்பாக இருப்பதாகக் கூறி வருகின்றனர். வெறும் 57 நொடிகள் ஓடினாலும் மிகவும் ரசிக்கும் விதமாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.