fbpx
Connect with us

அஜித்தின் எதிர்கால கனவு இதுதான்.! ரங்கராஜ் பாண்டே கூறிய மாஸ் தகவல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் எதிர்கால கனவு இதுதான்.! ரங்கராஜ் பாண்டே கூறிய மாஸ் தகவல்

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பு மட்டுமின்றி பல துறையிலும் ஆர்வம் காட்டி அதிலும் சாதித்து வருகிறார். நமக்கு தெரிந்தவரை அஜித் கார் மற்றும் பைக் அதிகம் ஆர்வம் உடையவர் என்பது தெரியும். ஆனால் அஜித் ஏரோ மாடலிங் துறையிலும் மற்றும் புகைப்படக் கலைஞராகவும் ,பேட்மிட்டன் ,நீச்சல் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம் உடையவர் என ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார்.

ஆம் அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை இப்படத்தில் ரங்கராஜ் பாண்டே ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் எளிமையானவர் ,தானே சமைத்து அனைவருக்கும் பரிமாற கூடியவர் என்றும் கார், பைக் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம் உடையவர் கூறியுள்ளார்.

மேலும் அஜித்தின் எதிர்காலக் கனவை பற்றி கூறியுள்ளார். அதாவது தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் விளையாட்டுக்கான சிறந்த அகாடமியை உருவாக்கி தமிழக இளைஞர்கள் மற்றும் இந்திய  பயன்பெறும் வகையில் அது அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாக ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார். இதனால் அஜித்தின் எதிர்கால கனவு ஒரு அகாடமியை உருவாக்குவது என தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top