பிரபலத்தை சந்தித்த அஜித்.. வாவ்! மாஸ் கூட்டணியில் அதிரடி படம்

தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை பெண்களுக்கான கதைக்களம் என்பதால் மக்களிடையே, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தல அஜித் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இதில் வலிமை என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேர்கொண்டபார்வை தயாரித்த போனிகபூர் தான் இந்த படத்தையும் மீண்டும் தயாரித்துள்ளார். தல அஜித் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் போனிகபூர்.

தல அஜித்தின் அடுத்த 61வது படத்தை தயாரிக்கப் போவது யார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் புத்தாண்டன்று உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலினை சந்தித்து உள்ள தல அஜித் அடுத்த படத்திற்கு ஒப்புக் கொண்டார் என்பது போல் தெரிகிறது.

இதனால் தல அஜித்தின் அடுத்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதன் அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம். தயாரிப்பாளர் சரி, யாரு டைரக்டர்?

இந்த படத்தை ரஜினி படத்தை முடித்தவுடன் டைரக்டர் சிவா அல்லது ரொம்ப நாளாக காத்திருக்கும் விஷ்ணுவரதன் டைரக்ட் செய்யலாம் என செய்திகள் வந்துள்ளது. ஆக இவை எல்லாம் வினோத் படம் முடிந்தபின் தான் நடக்கும்.

Leave a Comment