அஜித் – ஷங்கர் இருவரும் இணைவதாகக் கூறப்பட்ட படம் அவ்வளவுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.அஜித் – ஷங்கர் இருவரும் ஒரு படத்தில் இணையப் போகின்றனர் என்ற வதந்தி, பல காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது.ajith vivegam

அது, வதந்தியாகவே இருந்துவிடுமோ… இருவரும் இணைய மாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.காரணம், தன்னுடைய அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை சிவாவுக்கே கொடுத்துவிட்டார் அஜித்.

அத்துடன், ஆபரேஷன் முடிந்து ஓய்வில் இருப்பதால், இன்னும் மூன்று மாதங்களுக்கு ஒன்லி ரெஸ்ட். ஷங்கரும் ரஜினியின் ‘2.0’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார்.Siva-and-ajith

அடுத்த வருடம் ஜனவரி இறுதியில் படம் ரிலீஸாகும்வரை அவராலும் வேறெதிலும் கவனம் செலுத்த முடியாது. எனவே, அஜித் – ஷங்கர் கூட்டணி அமைய இப்போது வாய்ப்பில்லை என்கிறார்கள்.