தல அஜித் தற்போது ஒரு சிறிய ஆபரேசன் செய்துவிட்டு ஓய்வு எடுத்து வரும் நிலையில் அவர் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. ‘தல 58’ படத்தை வரும் தீபாவளி அன்று அறிவிக்கவுள்ளார்களாம்.ajith vivegam

இந்த படம் ஆக்சன் படமல்ல என்றும், முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட், காதல், காமெடி கலந்த ஒரு குடும்ப எண்டர்டெயின்மெண்ட் படம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் அஜித்தின் மிகக்குறைந்த பட்ஜெட் படம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆக்சன் படத்தில் நடிப்பதை நிறுத்தி வைக்க அவர் முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தீபாவளிக்கு ஆரம்பிக்கவிருக்கும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் பொங்கல் தினத்தில் வெளியிடவும், படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும், அஜித்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.