Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தின் அடுத்த படம் பாகுபலி போன்ற பிரம்மாண்ட படைப்பா?

அஜித் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் படம் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விவேகம் படத்திற்கு சரியான வரவேற்பு அமையாததை அடுத்து, அஜித் தனது அடுத்த படத்தில் இயக்குனர் சிவாவுடன் இணைந்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் மே மாத முதல் வாரத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. விவேகம் படத்தின் ஸ்டில்களே அதிக எதிர்பார்ப்புகளை கிளப்பியதால், படத்தின் வெற்றி பெரிதாக இருக்கும் என நம்பப்பட்டது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவு சரியான வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து, இயக்குனர் சிவாவின் திரை வாழ்வை கருத்தில் கொண்டு இந்த பட வாய்ப்பையும் சிவாவிற்கே கொடுத்து இருக்கிறார் அஜித். தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு விறுவிறுப்பாக பணிகளை செய்து வருகிறது.
அஜித் அடுத்து தீரன் வினோத்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் அஜித் நடிப்பார் என்ற புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாலிவுட் படத்தை இயக்கி வரும் விஷ்ணுவர்தன், அதை முடித்து கொண்டு மீண்டும் கோலிவுட் திரும்பும் படம் இதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அஜித்துக்காக சோழ வரலாற்று கதை ஒன்றை எழுதி இருந்தார். விஷ்ணுவர்தன் இயக்குவதாக இருந்த இப்படத்தின் வேலைகள் அடிக்கடி தொடங்கப்பட்டு பல காரணங்களால் தள்ளி போனது. இந்நிலையில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் படத்தின் கதை இதுவாக தான் இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அதுமில்லாமல், பாகுபலி போன்ற வரலாற்று படமாக இப்படம் பிரம்மாண்டமாக அமைய இருப்பதாக தெரிகிறது. ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் அஜித்தை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
