AK

அஜித் – சிவா கூட்டணியில் நான்காவதாகத் தயாராகி வரும் விஸ்வாசம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது. இந்த கூட்டணியின் விவேகம் படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

ajith visuvasam
ajith visuvasam

இதனால், விஸ்வாசம் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்க படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறது. மார்ச் மாதத்திலேயே படப்பிடிப்புத் தொடங்கப்பட இருந்த நிலையில், தமிழ் சினிமா ஸ்ட்ரைக் காரணமாகத் தள்ளிப்போனது. ஸ்ட்ரைக் முடிந்த பிறகு சமீபத்தில் ஹைதராபாத்தில் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. படத்துக்காக ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் கிராமம் ஒன்றின் செட் மிகப்பெரிய அளவில் போடப்பட்டிருக்கிறது.

அஜித் – நயன்தாரா ஆகியோர் கலந்துகொண்ட பாடல் ஒன்றின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்திருக்கிறது படக்குழு. இதில், தம்பி ராமையா, போஸ் வெங்கட், யோகி பாபு, ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் அஜித்துடன் நடிக்கின்றனர். இந்தாண்டு இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ள படக்குழு, விறுவிறுப்பாகப் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. படக்குழுவினர் ஒவ்வொருவருடனும் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்ட் அடித்தன.

ajith visuvasam
ajith visuvasam

இந்தநிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கே அடுத்த படத்தையும் தயாரிக்கும் வாய்ப்பை அஜித் கொடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இயக்குநர் மட்டும் இதுவரை முடிவாகவில்லை. விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குநர் எச்.வினோத் ஆகியோர் அஜித்திடம் கதை சொல்லியிருப்பதாகவும், அதில் ஒன்றை அஜித் டிக் செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அஜித் ரசிகர்கள் அடுத்த கொண்டாட்டத்துக்குத் தயாராகிவிட்டனர்.