fbpx
Connect with us

ரஜினி, விஜய் கொடுக்காத வாய்ப்பை அஜித் கொடுப்பாரா

ரஜினி, விஜய் கொடுக்காத வாய்ப்பை அஜித் கொடுப்பாரா

thala-ajith‘வேதாளம்’ படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அஜித்தின் 58வது படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அஜித்தின் 58வது படத்தை விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் கதையை விஷ்ணுவர்தன் பிரபல எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து எழுதி வருவதாகவும் கூறப்படும் நிலையில் 58வது படத்தை இயக்கும் இயக்குனர் பட்டியலில் ‘பீட்சா, ஜிகர்தண்டா புகழ் கார்த்திக் சுப்புராஜ் தற்போது இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினி, விஜய் ஆகியோர்களின் படங்களை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இருந்த கார்த்திக் சுப்புராஜூக்கு அவர்கள் இருவரையும் இயக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top