ajith

சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கவிருக்கும் படத்தில் முன்னணி இசையமைப்பாளர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா, அடுத்ததாக அஜித்தை வைத்து ‘வீரம்’ படத்தை இயக்கினார். அந்தப் படம் ஹிட்டாக, அடுத்ததாக ‘வேதாளம்’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் வழங்கினார்.

ajith vivegam
ajith vivegam

இப்படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் அடுத்ததாக வெளியான ‘விவேகம்’ படம் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும், ரசிகர்களிடமும், வணீக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்க இருக்கிறது.

அதிகம் படித்தவை:  அஜித் விசுவாசம் படத்தின் ஹீரோயின் இவர்தான் அதிகாரபூர்வ அறிவிப்பு.! தல ரசிகர்கள் வெறித்தனமான கொண்டாட்டத்தில்
ajith

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

‘வேதாளம்’, ‘விவேகம்’ இரண்டு படங்களுக்கும் இசையமைத்தவர் அனிருத். சிவாவைப் போலவே அவருக்கும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் தருவார் அஜித் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.

‘ஆலுமா டோலுமா’ ஹிட் கொடுத்த அனிருத்துக்குப் பதிலாக, யுவன் சங்கர் ராஜா அஜித்தின் அடுத்த படத்துக்கு இசையமைக்கப் போகிறார்.

அதிகம் படித்தவை:  அஜித்திற்கு தல என்று பெயர் வைத்ததே இவர்தான்..!உண்மையை உடைத்தெறிந்த விவேக்..

அஜித் நடித்த ‘தீனா’, ‘பில்லா’, ‘மங்காத்தா’ உள்ளிட்ட அஜித்தின் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா.

ajith

இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில வருட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் அஜித்தின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு யுவனுக்கு கிடைத்திருக்கிறது.