விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் எந்தவித பின்னணியும் இல்லாமல் முன்னணி ஹீரோவாக உயர்ந்து நிற்பவர் `தல’ அஜித். தனக்கென எதுவும் ரசிகர்களை கொண்டு இருந்தாலும், எளிமையாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புவார் அஜித். ரிசர்வ் டைப்பான இவர், மீடியா வெளிச்சம் தன் மீது படுவதை விரும்புவதில்லை. இதனால், பொது நிகழ்ச்சிகளிலும், ஏன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதை தவிர்த்து விடுகிறார். 1992ல் பிரேம புத்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதன் பின்னரே அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தமிழில் இவரின் முதல் வெற்றி படமாக அமைந்தது ஆசை படம் தான்.

தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். அஜித் – சிவா கூட்டணியில் நான்காவதாகத் தயாராகி வரும் படம் இது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. அப்பா, மகன் என இரு வேடங்களில் அஜித் நடிக்க இருக்கிறார். படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதன்முறையாக அஜித் படத்தில் இசையமைப்பாளர் இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அவரின் இசையில் பாடல்கள் எல்லாம் சிறப்பாக வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் தம்பி ராமையா, போஸ் வெங்கட், யோகி பாபு, ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. வினோத்துடன் இணைவது ஏறத்தாழ உறுதியாகி இருக்கும் நிலையில், படத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.