அஜித் தற்போது விவேகம் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாகவுள்ளார். படம் முழுவதும் முடிந்துவிட்டாலும் டப்பிங் வேலைகள் மட்டும் கொஞ்சம் இருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் தான் நடிக்கின்றார் என பல தகவல்கள் உலா வந்தது.

ஆனால், நேற்று விஷ்ணுவர்தன் இசையமைப்பாளர் யுவனுடன் தன் அடுத்தப்படத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளார்.

இதை பார்த்த பலரும் இது அஜித் படத்திற்கான வேலைகள் தான் என கூறி வருகின்றனர். இன்னும் சில தினங்களில் அஜித்தின் அடுத்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வரவுள்ளது.