விவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் தல அஜித் 58வது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விவேகம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனத்தை பெற்றுள்ள இப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை படைத்து வருகிறது.Siva-and-ajith

இந்நிலையில், வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படத்தைத் தொடர்ந்து தல அஜித்தின் 58வது படத்தையும் சிவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.

மேலும், இப்படம் தொடர்பாக முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.