fbpx
Connect with us

Cinemapettai

அஜித்தின் அடுத்தடுத்து நான்கு படங்களும் இவருக்கு தான்.? இடையில் ஒரு படம் மட்டும் வேறு ஒருவருக்கு.

ajith

News | செய்திகள்

அஜித்தின் அடுத்தடுத்து நான்கு படங்களும் இவருக்கு தான்.? இடையில் ஒரு படம் மட்டும் வேறு ஒருவருக்கு.

தல அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார்.

ஹிந்தியில் மெகா ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரியும், இந்நிலையில் படத்தை அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் ரிலீஸ் செய்ய இருந்தார்கள் ஆனால் படப்பிடிப்பு முடியாத காரணத்தால், படத்தை வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

நேர்கொண்ட பார்வை படத்தை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்துள்ளார், தல அஜித் அடுத்தடுத்து 4 படங்கள் போனி கபூர் தயாரிப்பில் தான் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது, அதேபோல் இடையில் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திலும் ஒரு படத்தில் நடிப்பார் என கூறுகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top