Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரசிகர்களுக்காக நடு ரோடுன்னு கூட பார்க்காமல் அமர்ந்த அஜித்.! வைரலாகும் வீடியோ.!
ரசிகர்களுக்காக நடு ரோடுன்னு கூட பார்க்காமல் அமர்ந்த அஜித்.!
தல அஜித் விசுவாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக போனி கபூர் தயாரிப்பில் தல 59 படத்தில் நடிக்க இருக்கிறார், இந்த நிலையில் தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், இவர் பயிற்சிக்கு செல்லும் புகைப்படங்களும் பயிற்சி எடுக்கும் புகைப்படங்கள் வீடியோக்களும் இணையதளங்கள் வெளியாகி வைரல் ஆனது அனைவருக்கும் தெரியும்.

ajith
அதுமட்டுமில்லாமல் துப்பாக்கி சுடும் பயிற்சி அரங்கில் ரசிகர்கள் சிலர் நாங்கள் 5 மணி நேரமாக காத்துக் கொண்டிருக்கிறோம் உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக என்று அன்புத் தொல்லை செய்தார்கள் அதன் வீடியோ இணையதளங்களில் வெளியானது.
பொதுவாக ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டால் அன்பாக பக்குவமாக அஜித் புகைப்படம் எடுத்துக்கொள்வார் ஆனால் இந்த முறை ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தயவுசெய்து இங்கிருந்து போய் விடுங்கள் என கூறியுள்ளார்.
இதனை பார்த்த அஜித் பயிற்சியாளர் ரசிகர்களிடம் இதற்கு பயந்து தான் அவர் வெளியே வருவதில்லை அவரை கொஞ்சம் ப்ராக்டிஸ் செய்ய விடுங்கள், என்று கூறியுள்ளார் இந்த நிலையில் மீண்டும் அஜித்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையை மேலும் ஒரு வீடியோ ஒன்று இணையதளங்களில் அது அந்த வீடியோவில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி முடிந்த பிறகு வெளியே வந்த அஜீத்தை ரசிகர்கள் சூழ்ந்து உள்ளார்கள் ரசிகர்கள் கேட்டதற்காக நடுரோட்டில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thala #Ajith sir latest video.
| via : @Dinu_Akshiii | #Viswasam #Ak59 #Thala59 | pic.twitter.com/XlWoukyJk8
— Ajith (@ajithFC) February 12, 2019
