Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் படத்தில் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை சர்ப்ரைஸ்
அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தில் அவரின் கதாபாத்திரம் குறித்த சூப்பர் தகவல் வெளியாகி இருக்கிறது.
அஜித், சிவா கூட்டணியில் இதுவரை வீரம், விவேகம், வேதாளம் என மூன்று படம் வெளியாகி இருக்கிறது. விவேகம் படத்தை தவிர மற்ற இரண்டு படங்களுமே நல்ல வெற்றியையே பெற்றது. விவேகம் படத்திற்கும் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், ரிலீஸுக்கு பிறகு படம் அதை நிவர்த்தி செய்யாததால் படத்தின் வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதை தொடர்ந்து, அடுத்த படத்தில் அஜித் வேறு யாருடனாவது இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என் நண்பர் சிவா என்னை தவிர மற்ற நாயகர்களின் படங்களை இயக்க செல்லும் போது வெற்றி இயக்குனராக செல்ல வேண்டும் என அவருக்கே நான்காவது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். எந்த முறையும் இல்லாமல் படத்தின் அறிவிப்பு வெளியான அன்றே, படத்தின் பெயரும் அறிவிக்கப்பட்டது.
விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸே இப்படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. முதலில் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், சில பல காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து, அனிருத், சாம் சி.எஸ் என பலரும் தேர்வு பட்டியலில் இடம் பெற்று, எதிர்பாராத விதமாக டி.இமானுக்கு இசையமைப்பு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதற்கு முன்னரே, ஏகன், பில்லா படங்களில் அஜித்துடன் ஜோடி போட்ட நயந்தாரா இப்படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டார். இருவருக்கும் ரசிகர்கள் ஏராளம் என்பதால் படத்தின் மீதான கிரேஸ் தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கிறது. படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பல காரணங்களால் தள்ளிப்போனது. அதையடுத்து, தயாரிப்பாளர் சங்க போராட்டத்தை தொடர்ந்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது, ஐதராபாத்தில் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ajith visuvasam
இந்நிலையில், இப்படத்தில் அஜித்திற்கு இரண்டு கதாபாத்திரங்கள் என கிசுகிசுக்கப்படுகிறது. ஒரு வேடத்தில் முதுமையான வயதில் அப்பாவாகவும், இளமையான வயதில் மற்றொரு வேடம் என நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இளம் வயது அஜித்தின் ஜோடியாக நயந்தாரா நடிக்க இருக்கிறார். குடும்ப கதை என முன்னரே அறிவிக்கப்பட்டு இருப்பதால், அப்பா அஜித் இருந்தால் கண்டிப்பாக இன்னொரு நாயகியும் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வாய்ப்பை தட்ட கோலிவுட்டில் போட்டி போட்டா கிளம்பி இருக்கிறது.
