Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவாவின் கண்டிஷனுக்கு செவிசாய்த்த சத்ய ஜோதி பிலிம்ஸ்.!

அஜித் மற்றும் சிவா கூட்டனி இனையும் விஸ்வாசம் படத்தில் அறிவிப்பு மட்டுமே வெளியானது.
ஆனால் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பே தல ரசிகர்கள் அமர்களப் படுத்திவிட்டார்கள்,அதன் பின்பு எவ்வித அறிவிப்பும் வராமல் இருந்தது படக்குழுவிடம் இருக்கிறது.
படப்பிடிப்பு இன்னும் துவங்க வில்லை. பொங்கல் கழித்து படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சமீபத்தில் விசுவாசம் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் என கூறினார்கள் ஆரம்பத்தில். ஆனால் தற்பொழுது அதில் சிக்கல் எழுந்துள்ளது.
அது என்னவென்றால் யுவன் ஷங்கர் ராஜாவின் சம்பளம் நிர்னைப்பதில் தான் சிக்கல், அதனால் யுவன் ஷங்கர் ராஜா படத்தில் இருந்து விளகியுள்ளதாக செய்திகள் வலம் வந்தன.பின்பு
கடந்த வருடம் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் மாபெரும் வெற்றிப்பெற்ற விக்ரம்வேதா இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இதன் உண்மையான அறிவிப்பு விரைவில் வரபோகிறது என கூறினார்கள்.
இதனை அஜித் ரசிகர்கள் இணையத்தளத்தில் கொண்டாடி வந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் உலா வந்துகொண்டே இருக்கிறது.
சில வாரங்கலாக விஸ்வாசம் படத்திற்கு இசையமைப்பாளர் அவர் இவர் என பெரும் வதந்தி பரவியது. தற்போது அந்த படத்திற்கு சிவா கேட்டது போல் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகி உள்ளார்.
