தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் அஜித், இவர் பெருமளவில் உலகெங்கும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் அஜித்தின் பிறந்த நாள் வருகிற மே 1 ஆகும் இதனை பிரமாண்டமாக கொண்டாட அஜித் ரசிகர்கள் பல திட்டங்கள் போட்டுள்ளார்கள்.

ஒரு வாரத்திற்கு முன்பே அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் பல டேக்கை கிரியேட் செய்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் மேலும் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக பிரபல திரையரங்கம் அஜித்தின் மெகா ஹிட் படத்தை திரையிட பிளான் போட்டுள்ளார்கள்.

ஆம் திருநெல்வேலியில் உள்ள முத்துராம் சினிமாவில் அஜித் ஷாலினி இணைந்து நடித்த அமர்க்களம் படத்தை திரையிட போவதாக போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.