Connect with us
Cinemapettai

Cinemapettai

தமிழ் சினிமாவை வளைச்சு போட திட்டம் தீட்டிய அஜித் பட தயாரிப்பாளர் .. வலையில் சிக்கும் நடிகர்கள்

ajith-boney

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவை வளைச்சு போட திட்டம் தீட்டிய அஜித் பட தயாரிப்பாளர் .. வலையில் சிக்கும் நடிகர்கள்

தல அஜித் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் நடிக்க முடிவு எடுத்துள்ளார். அதன் தொடர்ச்சிதான் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வலிமை படத்திலும் நடித்து வருகிறார். மேலும் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவிக்கு தல நல்ல பழக்கம் என்பதால் அஜித்தை வைத்து தமிழ் சினிமாவில் ஒரு பெரிய திட்டத்தை போட்டார் போனி கபூர்.

அந்தத் திட்டத்தில் வெற்றியும் கண்டார் என்று சொல்லலாம். அவர் எதிர்பார்த்தபடியே வலிமை படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து ஓரளவு தமிழ் சினிமாவில் மார்க்கெட் வைத்திருக்கும் நடிகர்களையும் வளைத்துப் போட்ட திட்டம் போட்டுள்ளார்.

அதில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் சேர்ந்து விட்டதாக தெரிகிறது. சிவகார்த்திகேயனும் தொடர்ந்து பெரிய அளவில் அதாவது இந்தியாவிலேயே அதிக அளவு பணம் பலமுள்ள தயாரிப்பாளர்களை தன் கைவசம் சேர்த்து வருகிறார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் விரைவில் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளதாகவும் அதை அருண்ராஜ் காமராஜா இயக்க உள்ளாராம்.

அடுத்தது அவரது டார்கெட் தளபதி விஜய் ஆக இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய்க்கு உலகளவில் பெரிய மார்க்கெட் இருப்பதால் அவரையும் வளைத்து போட திட்டம் போட்டுள்ளாராம் போனி கபூர்.

ஆனால் விஜய்யை இப்போதைக்கு சன் பிக்சர்ஸ் குத்தகைக்கு எடுத்து இருப்பதால் வெயிட் செய்ய வேண்டிய நிலைமை. எப்படியோ தமிழ் சினிமாவில் தனக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அதற்கேற்ற ஆளுமையை செலுத்தி விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் போனி கபூர்.

நீங்க நடத்துங்க ராசா!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top