Tamil Cinema News | சினிமா செய்திகள்
16 வருடங்களுக்கு முன் அஜித் படத்தை தயாரித்து நஷ்டத்தால் தற்கொலைக்கு முயன்ற பிரபல தயாரிப்பாளர்.. அடக்கடவுளே!
இன்றுதான் தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவரே எதிர்பார்க்காத அளவுக்கு ஒவ்வொரு படங்களும் பெரிய அளவு ஓபனிங் மற்றும் வசூல் குவித்து வருகின்றனர்.
ஆனால் ஒரு சில வருடங்களுக்கு முன்பு தல அஜித் தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய சினிமா கரியரில் அதிக தோல்வி படங்களை கொடுத்ததும் அவர்தான் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
இருந்தாலும் அதையெல்லாம் தாண்டிதான் தற்போது முன்னணி நடிகராக இருக்கிறார். அப்படி அஜித் தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரது படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் 40 தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
ரோஜா கம்பைன்ஸ் காஜாமைதீன் தல அஜித்தின் ஜனா படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2004 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் படுதோல்வியை சந்தித்து அஜித் சினிமா வரலாற்றையே ஆட்டி பார்த்தது.
அந்த சமயத்தில் அஜித் ஆஞ்சநேயா, ஜனா போன்று தொடர்ந்து தோல்வி கொடுத்துக் கொண்டிருந்த நேரம். இன்னும் சொல்லப்போனால் தல அஜித் சினிமாவில் இருப்பாரா என யோசிக்க வைத்த காலகட்டம்.
அப்போது காஜாமைதீன் அந்த படத்தின் தோல்வியை தாங்க முடியாமல் பல நஷ்டத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாராம். காஜா மைதீன் பல படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தது உண்மைதான் என்றாலும் ஜனா படத்துக்காக தான் அப்படி செய்தாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வருகிறது.
