Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் அடுத்த படத்தின் ஹீரோயின்! நடிப்புக்கு முழுக்கு போட்டவர் திரும்ப வந்தார்

அஜித் நடிக்கும் விசுவாசம் படம் ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளிவருகிறது. அஜீத் படத்துக்கு ஹீரோயின்கள் யாராக இருப்பார் என்பது தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். விசுவாசம் படத்தில் நயன்தாரா இணைந்தார். பின்னர் தனது அடுத்த படத்தில் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தில யாரு இணைவார்கள்? படத்தில் நடிகைகளுக்கு பாடல்களை தவிர வேறு காட்சிகள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் அஜித் படத்தில் இணைய வேண்டும் என்பது நடிகைகளின் ஆசை.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குனர் வினோத் சொன்ன கதையில் அஜித்திற்கு மிகவும் பிடித்து அதில் நடிக்க போகிறார். இந்த படத்தின் மற்ற நடிகர்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிப்பார் என பல நடிகைகள் காத்திருக்க திடீரென நஸ்ரியா நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

பகத் பாசில் மனைவி நஸ்ரியா நல்ல மார்க்கெட்டில் இருக்கும் போதே திருமணம் செய்து சென்று விட்டார். ராஜா ராணி படத்தில் அவருடைய நடிப்பை பார்த்து வியந்தனர். பின்னர் நடிப்பை பாதியில் விட்டு விட்டார். இப்பொழுது இரண்டாவது இன்னிங்ஸ் தமிழ்சினிமாவில் தொடங்க இருக்கிறார். அதில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏற்கனவே அவர் உடல் சற்று தடித்த நிலையில் இருந்தார். இப்பொழுது அந்தப் படத்துக்காக உடம்பை குறைத்துக் கொண்டு இருக்கிறார் என சில தகவல்கள் வந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top