Tamil Cinema News | சினிமா செய்திகள்
லொள்ளு சபாவில் சிக்கப் போகும் அஜீத்.. விஜய் டிவியின் விளம்பர திட்டம்
விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியால் சந்தானம் பெரும் வளர்ச்சி அடைந்தார்.
லொள்ளு சபாவில் விஸ்வாசம்
விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியால் சந்தானம் பெரும் வளர்ச்சி அடைந்தார். பின்பு மன்மதன் படத்தில் சிம்பு அறிமுகப்படுத்தி இன்று நடித்தான் ஹீரோதான் என்று நடித்துக் கொண்டிருக்கிறார்.
சந்தானம் இல்லாமல் சற்று தொய்வடைந்த லொள்ளுசபா சிறிது காலம் நிப்பாட்டி வைத்திருந்தனர். இப்பொழுது திரும்பி லொள்ளு சபா நிகழ்ச்சியை நடத்தப் போகிறார்கள்.
இந்த லொள்ளு சபா நிகழ்ச்சியில் முதலில் ஸ்பூப் செய்யப் போகும் படம் அஜித் நடித்து வெற்றி பெற்ற விஸ்வாசம் படம். ரொம்ப நாள் கழித்து ஆரம்பிக்க போவதால் ஒரு விளம்பரம் தேவை. அதற்கு அஜித்தின் விஸ்வாசம் தான் சரியாக இருக்கும் என முதல் நிகழ்ச்சியாக விஸ்வாசம் படத்தை கலாய்க்க உள்ளனர்.
எது எப்படியோ அஜித்தை வைத்து விளம்பரப்படுத்தி பணம் சம்பாதிக்க போவது விஜய் டிவி தான். இதில் யார் யார் நடிக்கிறார்கள் என்று விரைவில் பார்க்கலாம்.
