‘கைதி நம்பர் 150’ படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் கெட்ட ஆட்டம் போட்ட ராய் லக்‌ஷ்மி அடுத்து பாலிவுட் பக்கம் பயணித்தார்.

Raai-Laxmi

‘ஜூலி 2’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் ராய் லக்‌ஷ்மி தனது முதல் படத்திலேயே பாலிவுட் திரையுலகைத் தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

அதற்காகவே ‘ஜூலி 2’ படத்தில் கவர்ச்சியில் எக்ஸ்ட்ரா லார்ஜ் தாராளம் காட்டியுள்ளார். இந்தப் படத்தை பாலிவுட் ரசிகர்கள் தாண்டிப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Raai-Laxmi

இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்சிகளில் கவனம் செலுத்திவரும் ராய்லக்ஷ்மி அளித்துள்ள ஒரு பேட்டியில் அஜித்துடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா..? என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு, அஜித் சார் படம் என்றால் கதையே கேட்காமல் ஒகே சொல்லிவிடுவேன் என்று சிலிர்த்துள்ளார் ராய் லக்ஷ்மி. மேலும்

அஜித் புதிய படத் தலைப்பு இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.

Ajith
Ajith

பொதுவாக தனது படங்களுக்கான தலைப்பை கடைசி வரை அறிவிக்காமலே இருப்பதுதான் அஜித் ஸ்டைல். ஆனால் இந்த முறை படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பை பட நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.தியாகராஜன் தயாரிக்கிறார். படத்திற்கு விசுவாசம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். படப்பிடிப்புகள் ஜனவரி 2018ல் தொடங்குகிறது. படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ajith

இந்நிலையில் தலைப்பு வெளியான சற்று நேரத்திற்குள் ட்விட்டர் பக்கத்தில் இந்திய அளவிலான ட்ரெண்ட்டில் படம் இடம் பிடித்துள்ளது.