fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

திருமணத்திற்கு பிறகும் நடிகர்களுடன் நெருங்கி நடிப்பேன்.. அடம்பிடிக்கும் அஜித் பட நடிகை

thala-ajith-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திருமணத்திற்கு பிறகும் நடிகர்களுடன் நெருங்கி நடிப்பேன்.. அடம்பிடிக்கும் அஜித் பட நடிகை

தல அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. ஹிந்தியில் உருவான பிங்க் படத்தின் ரீமேக்காக இந்த படம் அமைந்தது.

யாருமே இந்த படம் பெரிய அளவு வசூல் செய்யாது என எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் தல அஜித்தின் மாஸ் இந்த படத்தை 100 கோடி வசூல் செய்ய உதவியது.

அந்த படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத்(shraddha srinath). நேர்கொண்ட பார்வை படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

சமூக வலைதளங்களில் நாளுக்குநாள் நடிகைகள் சர்ச்சை கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்தவகையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கேள்வியை கேட்டு அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு ஆண்கள் ரோமன்ஸ் செய்தால் எந்த தவறும் இல்லை. ஆனால் பெண்களாகிய ஹீரோயின்கள் ரொமான்ஸ் செய்தால் தவறா, இதற்கு சினிமா துறையினர் அனைவரும் பதில் சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

வரவர நடிகர்களுடன் சரிக்கு சமமாக போட்டி போடுவதில் நடிகைகள் ஆர்வமாக இருக்கின்றனர். நீங்க பண்ற எல்லாமே நாங்களும் பண்ணுவோம் என்ற நிலைமையில் இருக்கிறது சினிமா வட்டாரம். எங்க போய் முடியப் போகுதோ?

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top