ajith

‘துப்பறிவாளன்’ படத்தைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ மற்றும் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இவ்விரண்டு படங்களையுமே விஷால் தயாரித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

Kathiruppor pattiyal

மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்து வருகிறார்கள்.

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க பொறுப்பை ஏற்றதும் நடிகர் விஷால் மிகவும் பிஸியாகவே இருக்கிறார். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைய பிரச்சனைகள் இருப்பதால் அதன் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்.

nandhitha

வளரும் நடிகை என்ற நிலையிலிருந்து முன்னணி நடிகையாக மாறி வரும் நந்திதா நடிக்கும் புதிய படம் காத்திருப்போர் பட்டியல்.

லேடி ட்ரீம் சினிமாஸ், பைஜா டாம் தயாரிப்பில் உருவாகிறது இந்தப் படம். ஏற்கனவே பரத் நடிப்பில் உருவான யுவன் யுவதி என்ற திரைப்படத்தை இவர்கள் தயாரித்துள்ளனர்.

காதலுக்காக, வேலை வாய்ப்புக்காக, திருமணத்துக்காக, அரசியல் பதவிக்காக, கல்லூரி சீட்டுக்காக, பேருந்தில் இடம் பிடிப்பதற்காக என நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு காத்திருப்பு பட்டியலில் காத்திருப்பவர்கள்தாம்.

nandhitha

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும், காத்திருக்கும் தருணங்களையும் அடிப்படையாக கொண்டு இந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் பாலையா டி ராஜசேகர்

அண்மையில் விஷால் காத்திருப்போர் பட்டியல் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியிருந்தார். நிறைய படங்கள், நல்ல கதையாக இருந்தாலும் சரியான வரவேற்பை பெறுவதில்லை.

ajith

இப்போது ஒரு முக்கியமான விஷயம் இன்னும் 2, 3 மாதத்தில் முடிய இருக்கிறது. அது நடந்ததும் நல்ல படங்கள் மக்களிடம் வரவேற்பு பெறும், லாபம் அடையும்.

நிறைய படங்கள் ரிலீஸ் ஆவதற்கு பிரச்சனையை சந்தித்தாலும் இறுதியில் வெற்றியை சந்தித்துள்ளது. துள்ளுவதோ இளமை, வாலி முக்கியமாக வரலாறு போன்ற படங்கள் எல்லாம் நிறைய பிரச்சனைகளுக்கு பிறகு தான் வெளியாகி ஹிட்டடித்தது.

அதனால் பிரச்சனைகள் இருந்தால் அதை பற்றி பயப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.