Tamil Cinema News | சினிமா செய்திகள்
படம் வெளியாகி இரண்டு வருடம் கழித்து பிரமாண்ட சாதனை படைத்த அஜித்.! தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
வேதாளம் சிவாவின் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் 2015ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த இத்திரைப்படம் 2015 தீப ஒளித்திருநாளன்று அன்று வெளியானது.
இப்படத்தின் இயக்குநர் சிவா, அஜித் குமார் நடிப்பில் ஏற்கனவே வெளியான வீரம் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். அஜித் குமாரின் வீரம், என்னை அறிந்தால் திரைப்படங்களை தயாரித்த ஏ. எம். ரத்னம் தயாரித்துள்ளார். இப்படம் 2011-ல் வெளியான மங்காத்தா படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
மேலும் இந்த படத்தில் உள்ள ஆலுமா டோலுமா என்ற படம் இன்றும் கூட ரசிகர்களிடம் பலத்த வரவேற்ப்பை பெற்றுள்ள பாடல் பல ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் இருக்கும் ஒரு ஹிட் பாடல் ஆகும்.
இந்த ஆலுமா டோலுமா பாடல் youtube இணையதளத்தில் 5 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.இதனை கொண்டாடும் விதமாக #50MViewsForAalumaDoluma என்ற ஹேஸ்டேக்கை டிவிட்டரில் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
அதுமட்டும் இல்லாமல், விஸ்வாசம் படம் குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு வரும் 25-ம் தேதி வெளியாகும் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
