செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சீனியர் நடிகர்களின் ஃபேவரைட்டாக மாறிய அஜித் பட நடிகை.. 39 வயதிலும் உங்க மவுசு குறையலை!

பைவ் ஸ்டார் படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை கனிகா. ஆனால், இயக்குனர் சேரனின் ஆட்டோகிராப் படத்தில் நடித்த பிறகு தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. தொடர்ந்து அஜித் மாதவன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

அதேபோல மலையாளத்திலும் நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் நடிப்பில் உச்சத்தில் இருந்த சமயத்தில் திடீரென திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். தற்போது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து கடந்த ஐந்து வருடங்களாக பிஸியாக நடித்து வருகிறார் கனிகா.

தற்போது மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் தவறாமல் இடம் பெற்று வருகிறார் கனிகா. கடந்த 2 வருடத்திற்கு முன்பு வெளியான மம்முட்டி நடித்த மாமாங்கம் என்கிற வரலாற்றுப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கனிகா.

அப்படம் மூலம் பிரபலமான கனிகா தற்போது மலையாளத்தில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது சுரேஷ் கோபி நடித்து வரும் பாப்பன் என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதேபோல தற்போது பிரித்விராஜ் டைரக்சனில் மோகன்லால் நடித்து வரும் ப்ரோ டாடி என்கிற படத்திலும் கனிகா இணைந்துள்ளார். அந்தவகையில் கனிகா, சீனியர் நடிகர்களின் மோஸ்ட் வான்டட் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

Trending News