Tamil Cinema News | சினிமா செய்திகள்
வருமான வரித் துறையை கலாய்த்த அஜித்.. தல-க்கு எவ்வளவு தில்லு பார்த்தீங்களா
தமிழகத்தில் தளபதி விஜய் மற்றும் தல அஜித் என்றால் தனி மாஸ் என்றுதான் சொல்லவேண்டும். இவர்கள் இருவரைப் பற்றிய ஒரு துண்டு செய்தி வந்தாலும் தலைப்புச் செய்தியாக மாறிவிடும். அதற்கு சான்றிதழ் நேற்று தளபதி விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டது.
தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பிகில். இந்த படம் கிட்டத்தட்ட 300 கோடி வரை வசூல் செய்ததாக கூறியதால் படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனத்திடமும் மற்றும் படத்தின் ஹீரோவான விஜய் வீட்டிலும் இரண்டு நாட்களாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் தல அஜித் வீட்டில் ஒரு தடவை வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிந்த பிறகு தல அஜித் இடம் தவறான தகவலின் பேரில் வீட்டில் சோதனையில் ஈடுபட்டதாக தல அஜித் இடம் வருமானவரித்துறையினர் மன்னிப்பு கேட்டு விட்டு சென்றனர்.
அதன்பிறகு தல அஜித் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வருமான வரித்துறையினரை பங்கமாக கலாய்த்து இருந்தார்.அவர் கூறியதாவது,வருமான வரித் துறையினரின் உதவியால் வீட்டில் காணாமல்போன பொருட்கள் அனைத்தும் கிடைத்துவிட்டது என நக்கல் அடித்தார்.

ajith-ITraid-Statement
இந்த நிகழ்ச்சியும் தளபதி விஜய்யின் வீட்டில் வருமான வரி சோதனை பிரபலமானதை போல மிகவும் காரசாரமாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
