Vijay_Ajith

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்களின் வசூல் சாதனையை இவர்களே மாறி மாறி உடைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் சில வருடங்களுக்கு முன் தெலுங்கில் மெகா ஹிட்டான ஒக்கடு படத்தை தமிழில் எடுக்கலாம் என யோசித்து வந்தாராம்.

ஆனால், அதற்குள் ஏ.எம்.ரத்னம் அந்த படத்தின் தமிழக உரிமையை பெற்றுள்ளார், அவருக்கு விஜய் இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்பதே விருப்பமாம்.

பிறகு தரணி விஜய்யிடம் இந்த கதையை சொல்ல, விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம், மேலும், முதலில் இப்படத்தில் ஜோதிகா, சிம்ரன் நடிக்க தான் பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

அவர்களின் கால்ஷிட் பிரச்சனை அந்த வாய்ப்பு த்ரிஷாவிற்கு அமைந்தது. பிறகு கில்லி வெளிவந்து அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

குறிப்பு:  ஏ.எம்.ரத்னம் அவர்கள் விஜய்யை வைத்து குஷி, கில்லி, சிவகாசி போன்ற வெற்றி படங்களை தயாரித்தவர், இதே போல் அஜித்தை வைத்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆரம்பம், என்னை அறிந்தால் மற்றும் வேதாளம் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.