Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-birthday-special1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாட்ஷா பட இயக்குனரின் சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தவறவிட்ட தல அஜித்.. பின்னர் புலம்பினாராம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாட்ஷா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா. பாட்ஷா படம் அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் அடித்து நொறுக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அதிலும் தேவா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இந்த படத்தை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. அன்றைய தேதியில் டாப் இயக்குனராக வலம் வந்தவர். அவரின் ஒரு சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தல அஜித் தவற விட்ட செய்தி தற்போது இணையத்தில் உலா வருகிறது.

1997 ஆம் ஆண்டு ரகுவரன், விஜயகுமார், புதுமுக நடிகர் ராஜீவ் கிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆஹா. இந்த படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் தல அஜித் தானாம். தல அஜித்தின் ஒரு படத்தை பார்த்துவிட்டு மிகவும் அழகாக இருக்கிறார் என சுரேஷ்கிருஷ்ணா ஆஹா படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தாராம்.

ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. பின்னர் அந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததாக தகவல்கள் கிடைத்தது. ஆனால் படம் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்றதா என்பது தெளிவாக தெரியவில்லை.

Continue Reading
To Top