ajith-records
ajith

தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் என 3 படங்களை தொடர்ந்து இயக்குனர் சிவாவுடன் 4 வது முறையாக விசுவாசம் படத்தில் இணைந்துள்ளார், படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் இவர் இதற்க்கு முன் ஏகன், பில்லா, ஆரம்பம் 3 படத்தில் இணைந்து நடித்துள்ளார் 4 வது முறையாக விசுவாசம் படத்தில் இணைந்துள்ளார்.

Visuvasam
Visuvasam

மேலும் இசையமைப்பாளராக டி.இமான் முதல் முதலில் அஜித்துடன் விசுவாசம் படத்தில் இணைந்துள்ளார், விவேகம் படத்தை  தயாரித்த சத்திய ஜோதி பிலிம்ஸ் தான் விசுவாசம் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் ரசிகர்களுக்காக 3 சர்ப்பிரைஸ் இருப்பதாக கூறபடுகிறது.

அதிகம் படித்தவை:  விஜய் கோட்டையில் மாஸ் காட்டும் அஜித்தின் விவேகம், கபாலிக்கு அடுத்த இடத்தில்.!!!

இந்த படத்தின் முக்கிய படபிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் எடுக்க இருக்கிறார்கள் இந்த படபிடிப்பு தளத்தில் தான் வீரம் படம் படமாக்க பட்டது குறிப்பிடத்தக்கது. வீரம், வேதாளம் படத்தில் பிளாஷ் பேக் இருப்பது போல் விசுவாசம் படத்திலும் அழுத்தமான பிளாஷ்பேக் இருக்கும் என தெரிகிறது.

அதிகம் படித்தவை:  அஜித்தின் மச்சினிக்கு வந்த பரிதாப நிலை?

அதேபோல் வீரம் படத்தில் ரயில் சண்டை காட்சி இருந்தது, விவேகம் படத்தில் பைக் சேசின் இருந்தது, அனால் விசுவாசம் படத்தில் கொஞ்சம் கெத்தாக கார் சேசின் இருக்கும் என சொல்கிறார்கள் அதற்காக வெளிநாட்டு கார் ரேசர்கள் வந்துள்ளதாக கூறபடுகிறது, திரைப்படத்தை தீபாவளிக்கு திரையிட இருப்பதாக கூறுகிறார்கள்.