குட் பேட் அக்லிக்கு பிறகு AK64 இயக்குனர் இவர் தான்.. பிரம்மாண்ட படத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அஜித்

Ajith: அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அடுத்தடுத்த படங்கள் வெளிவர இருக்கிறது. இதில் விடாமுயற்சி ஒரு வருடத்திற்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு தற்போது தீபாவளியை குறி வைத்துள்ளது.

அதன் பிறகு அடுத்த வருட பொங்கலையும் அஜித் குத்தகைக்கு எடுத்துவிட்டார். இப்படி பண்டிகை தினத்தை முன்னிட்டு அவருடைய படங்கள் வெளிவர இருப்பது ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக தான் இருக்கிறது.

அதை இன்னும் அதிகரிக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் காட்டு தீ போல் பரவி வருகிறது. அதாவது அஜித்தின் அடுத்த பட இயக்குனர் சிறுத்தை சிவா தான் என சொல்லப்பட்டது. ஆனால் அவரோ கங்குவா 2 படத்தை முடித்த பிறகு தான் அஜித் படத்தை ஆரம்பிக்க முடியும் என்ற நிலையில் உள்ளார்.

அஜித்தை இயக்கப் போகும் பிரம்மாண்ட இயக்குனர்

எப்படியும் இதற்கு ஒரு வருட காலம் ஆகிவிடும். அதனாலேயே அஜித் இப்போது ஆயிரம் கோடி பட வசூல் இயக்குனரான பிரசாந்த் நீல் உடன் ஒரு ரகசிய சந்திப்பை நடத்தி இருக்கிறார். அதில் சில ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டிருக்கிறதாம்.

அதன்படி கே ஜி எஃப் 3 படத்தில் அஜித் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறாராம். அதற்கு அடுத்து அவரை சோலோ ஹீரோவாக வைத்து ஒரு படத்தை பிரசாந்த் நீல் இயக்க இருக்கிறாராம்.

அந்த வகையில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஏ கே 64 பட இயக்குனர் இவர்தான் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் இது இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும் கிட்டத்தட்ட உறுதியான தகவலாகவே இது இருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு தான் இந்த மீட்டிங் நடைபெற்று அனைத்து விஷயங்களும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் விரைவில் இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்கிறது திரையுலக வட்டாரம்.

பைக்கை ஓரம் கட்டி நடிப்பில் பிஸியான அஜித்

Next Story

- Advertisement -