சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அஜித் கைவசம் உள்ள 4 படங்கள்.. கேஜிஎஃப் பட இயக்குனருக்கு விரித்த வலை

Ajith: துணிவு என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த அஜித் அதன் பிறகு தற்போது வரை படங்கள் வெளியாகாமல் தடுமாறி வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்கு மேலாக நடந்து வருகிறது.

லைக்கா தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்திற்காக அஜித் தனது உடம்பை பல மடங்கு குறைந்திருக்கிறார்.

இந்த படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவித்த நிலையில் விடாமுயற்சி ரிலீஸ் தாமதமாவதால் இந்த படம் வெளியாகவும் தாமதமாகும். அடுத்ததாக அஜித் தனது ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா உடன் கூட்டணி போட இருக்கிறார்.

அஜித் லைன் அப்பில் உள்ள நான்கு படங்கள்

அஜித்துக்கு வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் என தொடர்ந்து நான்கு படங்களை சிறுத்தை சிவா கொடுத்திருந்தார். இப்போது மீண்டும் இவருடன் அஜித் கூட்டணி போடுவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு சிறுத்தை சிவா இப்போது சூர்யாவின் கங்குவா படத்தை எடுத்து இருக்கிறார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் கூட்டணி போட இருக்கிறார் அஜித். இந்த படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

அதன் பிறகு பிரபாஸின் சலார் படத்தை இயற்றியிருந்தார். அவருடைய படங்களுக்கு எல்லா மொழிகளிலும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அஜித்துடன் பிரசாத் நீல் கூட்டணி போட்டுள்ளதால் கண்டிப்பாக மாஸ் படமாக இருக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

Trending News