fbpx
Connect with us

Cinemapettai

அய்யப்பனும் கோஷியும் இயக்குனரிடம் கதை கேட்ட அஜித்.. கை கூடி வரும் நேரத்தில் இயக்குனருக்கு நடந்த சோகம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அய்யப்பனும் கோஷியும் இயக்குனரிடம் கதை கேட்ட அஜித்.. கை கூடி வரும் நேரத்தில் இயக்குனருக்கு நடந்த சோகம்!

சமீபகாலமாக மலையாள சினிமாவில் வெளிவரும் படங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த அய்யப்பனும் கோஷியும் படம் அனைத்து மொழிகளிலும் ரீமேக் ஆக உள்ளது.

பிரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிப்பில் வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாகி 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்த அந்தப் படத்தை இயக்கியவர் சச்சி.

தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து நடிகர்களும் வீட்டிற்குள் முடங்கி வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் தல அஜித் மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படத்தை பார்த்தாராம்.

அந்த படத்தை பார்த்ததும் அவருக்கு ரொம்ப பிடித்துப் போய்விட்டதாம். உடனடியாக அந்த இயக்குனர் சச்சிக்கு போன் பண்ணி படத்தைப் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டாராம். மேலும் தனக்கு ஒரு கதையை ரெடி செய்யுமாறு கேட்டுள்ளாராம்.

ஊரடங்கு உத்தரவும் முடிந்த பின்னர் அஜீத்தை சந்தித்து நேரடியாக கதை சொல்ல இருந்தாராம் சச்சி. ஆனால் திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் தல அஜித்துக்கு இந்த செய்தி பேரிடியாக அமைந்தது விட்டதாம். அவருடைய இறங்கலுக்கு நேரில் செல்ல முடியவில்லை என மிகவும் வருத்தப்பட்டாராம். இந்த செய்தியை பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார்.

தமிழில் உருவாக இருக்கும் அய்யப்பனும் கோஷியும் படத்தையும் அவர் தான் இயக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த படத்தில் கார்த்தியும் பார்த்திபனும் நடித்தால் நன்றாக இருக்கும் என விரும்பினார்.

Continue Reading
To Top