ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

உடல் எடையை சரமாரியாக குறைத்த அஜித்.. ஆளே மாறிட்டாரே!

Ajith : ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள் படங்களுக்காக தங்களது உடல் நிலையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள். உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்க வழக்கம் ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்தி வருவார்கள். அதோடு உடல் எடையை அதிகமாகாமல் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் அஜித்தை பொறுத்தவரையில் அவர் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் குதூகலமாகிவிடுவார்கள். பல படங்களில் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் நடித்திருக்கிறார். ஆனால் இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்திற்காக பல கிலோ உடல் எடையை குறைத்து இருக்கிறார்.

அப்படியே ஆளே மாறிட்டாரே என்ற அளவுக்கு தான் அந்த புகைப்படம் இருக்கிறது. வெள்ளை நிற கோட் ஷாட்டில் மாஸ் லுக்கில் அஜித் இருக்கிறார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் இப்போது இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். மேலும் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா தான் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அஜித்தின் சமீபத்திய புகைப்படம்

ajith-latest-photo
ajith-latest-photo

சமீபத்தில் இந்த படத்தில் பிரசன்னா இணைந்திருப்பதை உறுதிப்படுத்தினார். அதேபோல் சுனில், நஸ்லென் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டது.

ஆனால் குட் பேட் அக்லி படத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட படம் தான் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களினால் தாமதமாகி கொண்டே இருந்தது. ஒரு வழியாக இயக்குனர் மகிழ் திருமேனி இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். விரைவில் லைக்கா இந்த படத்தை ரிலீஸ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விடாமுயற்சி ரிலீஸ் தாமதம் காரணமாக குட் பேட் அக்லி படமும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் அடுத்த வருடம் கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இந்த இரண்டு படங்களும் வெளியாக இருக்கிறது. மேலும் அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள் அதிகம் இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News