Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் டேவிட் பில்லாவாக மாறிய அஜித்.. வேற லெவலில் வெளிவந்த புகைப்படம்
தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் முனைப்பில் உள்ளார்கள்.
வலிமை படத்தை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் திதி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தல அஜித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
தல அஜித் ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போதிருந்தே அஜித்துக்கும் ஸ்ரீதேவிக்கும் நல்ல பழக்கம் இருந்தது. அந்தவகையில் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜீத் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து வலிமைப் படத்திலும் போனி கபூர் தயாரிப்பில் நடித்து வருகிறார். இந்நிலையில் போனி கபூரின் அழைப்பை ஏற்று ஸ்ரீதேவியின் திதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அஜித்.

ajith-latest
பில்லா படத்தில் வரும் தல அஜித்தை புகைப்படத்தை போல நேற்று வெளியான அஜித்தின் புகைப்படங்கள் இருந்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் எல்லையில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
